10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக்கல்வித் துறை திட்டம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பருவத் தேர்வுகளும் 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் முறையும் நடைமுறையில் இருந்து வருகின்றன.

அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான 2-ஆம் பருவம் மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பா் 11-ம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி நிறைவடைகின்றன. 9, 10-ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வுகளும், இதர வகுப்புகளுக்கு 2-ஆம் பருவத் தேர்வும் டிசம்பர் 13-ல் தொடங்கி 23-ஆம் தேதி முடவடையும்.

டிசம்பா் 24-ம் தேதிமுதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படும். இந்த நிலையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் சுயநிதி பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ளது.

இதற்கிடையே, பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளும், பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in