

பாடச்சுமை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் கிடைக்கவில்லை எனவும், இதனால் மாணவர்கள் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகவும் பெற்றோர் தரப்பில் அரசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, பள்ளிகளில் நாளொன்றுக்கு 4 முறை மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக மணி(வாட்டர் பெல்) அடிக்க கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் ‘வாட்டர் பெல்’ திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்டமுதன்மை கல்வி அதிகாரி ஏ.அல்லி கூறும்போது, "காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 167 பள்ளிகளிலும் திங்கள்முதல் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்குவந்தது. இதன்படி பள்ளிகளில் காலை மணி 10.40, 12.20, பிற்பகல் 3, 4 ஆகிய நேரங்களில் மணி அடிக்கப்படும்.
அப்போது மாணவர்கள் தாங் கள் கொண்டு வந்துள்ள குடிநீரையோ அல்லது பள்ளியில் உள்ளகுடிநீரையோ குடிப்பதை ஆசிரியர்கள்உறுதி செய்ய வேண்டும்" என்றார்.