

பள்ளியின் செயல்பாடுகளைப் பாராட்டி புதுக்கோட்டை மாவட் டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருதைதமிழக அரசு வழங்கியுள்ளது.
அடிப்படை வசதிகள், கற்றல்,கற்பித்தல் உள்ளிட்ட பணிகளைசிறந்த முறையில் மேற்கொண்டு வரும் அரசு பள்ளிகளைதேர்வு செய்து சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் விருது அளிக்கப்பட்டது.
அதன்படி, கல்வி மாவட்டத்துக்கு ஒன்று வீதம் என புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசுநடுநிலைப் பள்ளி, கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பர விடுதி அரசு தொடக்கப் பள்ளி, அன்னவாசல் அருகே இடையப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வி துறைஇணை இயக்குநர் பொன்னையன் விருதுகளை வழங்கினார். அந்தந்தப் பள்ளிகளைச் சேர்ந்ததலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் விருதை பெற்றனர்.