Published : 26 Nov 2019 10:23 AM
Last Updated : 26 Nov 2019 10:23 AM

கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி அதிகாரி பரிசு வழங்கினார்

கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்எஸ் குளம் மாவட்ட கல்வி அதிகாரி கீதா பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.

கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாவட்ட தடகள போட்டி கோவை நேருவிளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித்திட்ட அலுவலர் கே.கண்ணன் வரவேற்றார். மாவட்டகல்வி அலுவலர்கள் கீதா (கோவை),சுப்புலட்சுமி (பேரூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:மாணவர்களுக்கான 1500 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.ஆதித்யன் முதலிடமும், கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.சபரி இரண்டாமிடமும், ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.நவீன்குமார் மூன்றாமிடமும் பெற்றனர்.

100 மீ. ஓட்டப்பந்தயத்தில் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்ஏ.கௌசல்குமார் முதலிடத்தையும், ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ஆகாஷ்இரண்டாமிடத்தையும், வெள்ளக்கிணர் விசிவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.வெங்கடேஷ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

குண்டு எறிதல் போட்டியில் குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் என்.பூபாலகிருஷ்ணன் முதலிடத்தையும், சின்னியம்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் வி.பிரசன்னா இரண்டாமிடத்தையும், ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் எல்.மோகன்ராஜ் மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.

மாணவிகளுக்கான 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.சபானா முதலிடமும், ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிஎஸ்.ராஜேஸ்வரி இரண்டாமிடமும், தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ஜெய மூன்றாமிடமும் பெற்றனர்.

உயரம் தாண்டுதல் போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கஸ்தூரி முதலிடத்தையும், வெள்ளக்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.விக்னேஷ்வரி இரண்டாமிடத்தையும், தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி டி.ஜோதிமணி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

குண்டு எறிதல் போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சி.ஹரிபிரியா முதலிடத்தையும், எம்.மஹாலட்சுமி இரண்டாமிடத்தையும், அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வி.காயத்ரி மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர். போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அலுவலர் கீதா பரிசுகோப்பைகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x