

62-வது மாநில அளவிலான குடியரசுதின தடகளப் போட்டிகள் திருச்சிமாவட்டம் தொட்டியத்தில் நடைபெற்றன. இதில்பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்றனர்.
14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவி வி.எம்.அனு 80 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கமும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வீ.பிரியதர்ஷினி ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றனர்.
மேலும், தன்யா, சிவஸ்ரீ, மரிய தர்ஷினி, ஆரோக்கிய எபிஷியா டெய்சி ஆகியோர் 4X400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆர்.சங்கீதா 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றனர். மேலும், வி.பிரியதர்ஷினி, வி.எம்.அனு ஆகியோர் தேசியதடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களையும் பயிற்சியாளர் கோகிலாவையும் மாவட்ட விளையாட்டு விடுதி மேலாளர்ஆர்.ஜெயக்குமாரி பாராட்டினார்.