

மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ராஜீவ்காந்தி விளையாட்டு மைதானத்தில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட குறு வட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இதில், நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.பாலமுருகன் தலைமை வகித்து பரிசு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிப் பேசினார். விழாவில் உதவி தலைமை ஆசிரியர் நடராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் கவிதா, நிர்மல்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.