கோவையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். படம்: ஜெ.மனோகரன்.
கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். படம்: ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

கோவை நேரு விளையாட்டு அரங்கில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை (டிச.3) முன்னிட்டு, கோவைமாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி, நேரு விளையாட்டு அரங்கில்நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டியை கோவை மாவட்ட ஆட்சியர்கு.ராசாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் 22 சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 584 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:50 மீ. ஓட்டப்பந்தயம் மாணவர்பிரிவில் மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளி மாணவர் பூபாலன் முதலிடமும், ஐஆர்சிஎஸ் பள்ளிமாணவர் மங்கல தனுஷ் இரண்டாமிடமும், குழந்தை ஏசு காதுகேளாதோர் பள்ளி மாணவர் சரண் மூன்றாமிடமும் பெற்றனர்.

மாணவிகள் பிரிவில் குழந்தை ஏசு காதுகேளாதோர் பள்ளி மாணவிகள் சுஹர்சரா முதலிடத்தையும், ஜீவிதா இரண்டாமிடத்தையும், தனுபிரியா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

100 மீ. ஓட்டப்பந்தயம் மாணவர் பிரிவில் ஐஆர்சிஎஸ் பள்ளி மாணவர் அந்தோணிராஜ் முதலிடத்தையும், குழந்தை ஏசு பள்ளி காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் மதன் இரண்டாமிடத்தையும், பிரதாப் மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.

மாணவிகள் பிரிவில் குழந்தை ஏசு பள்ளி காதுகேளாதோர் பள்ளி மாணவிகள் தர்ஷினி முதலிடமும், மருதாயி இரண்டாமிடமும், ஐஆர்சிஎஸ் பள்ளி மாணவி சுவாதிமூன்றாமிடமும் பெற்றனர். தொடர்ந்துபல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்தங்கமணி, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் பெல்ராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

‘‘இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் சென்னையில் டிசம்பர் 3-ம் தேதிநடைபெற உள்ள உலக மாற்றுத்திறனாளிகள் தின மாநில விளையாட்டு போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்” என்றுமாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in