புதுக்கோட்டை அருகே மரிங்கிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடைகள் வழங்கிய கொடையாளர்

புதுக்கோட்டை அருகே மரிங்கிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடைகள் வழங்கிய கொடையாளர்
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே மரிங்கிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் கொடை வாங்கிக் கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அருகே உள்ள மரிங்கிப்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 55 மாணவர்கள் பயில்கின்றனர். மழை பெய்யும்போது, குடை இல்லாததால் அவர்கள்பள்ளிக்கு உரிய நேரத்துக்கு வராமல்இருந்துள்ளனர். அவர்களுக்கு எப்படிஉதவி செய்யலாம் என்பது குறித்துபள்ளியின் தலைமை ஆசிரியை
நாகலட்சுமி, ஆசிரியர் திருப்பதி ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக குடை வாங்கிக்கொடுக்க திட்டமிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று காரைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சோலச்சி ராமநாதன், அனைத்து மாணவர்களுக்கும் குடைகளை வாங்கிக் கொடுத்தார். அந்தக் குடைகள் பள்ளிமாணவர்களுக்கு செவ்வாய்கிழமை வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு
குடை வாங்கிக்கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சோலச்சி ராமநாதனுக்கு பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் நன்றி தெரிவித்தனர்.

கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 540 பேருக்கு எஸ்.பி.எம். அறக்கட்டளை மூலம் இலவச காலணிகளை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in