தேசிய தடகள போட்டியில் சாதனை: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற கோவை பள்ளி மாணவி

தேசிய தடகள போட்டியில் சாதனை: நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற கோவை பள்ளி மாணவி
Updated on
1 min read

தேசிய தடகள போட்டியில் நீளம்தாண்டுதலில் தங்கம் வென்று கோவைபள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலான ஜூனியர்தடகள போட்டி, கர்நாடக மாநிலம்குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் கடந்தவாரம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர்.

தமிழகத்தில் இருந்து 145 பேர்பங்கேற்று விளையாடினர். இப்போட்டியில் கோவையில் இருந்து கலந்து கொண்ட மாணவி நிவேதிதா (13), நீளம் தாண்டுதல் போட்டியில் 5.33 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் இவர், கோவை அத்லடிக் கிளப்பில் பயிற்சி பெற்று வருகிறார். தனது சாதனை குறித்து மாணவி நிவேதிதா கூறிய தாவது:செல்வபுரம் பகுதியில் பெற்றோர் ஏ.ஞானஸ்கந்தன்-ஜி.சர்மிளா ஆகி யோருடன் வசித்து வருகிறேன். எனது தந்தை மில் தொழிலாளி. சிறுவயது முதலே விளையாட்டில் எனக்குமிகுந்த ஈடுபாடு உண்டு. எங்கள்ஊரில் பண்டிகை மற்றும் திருவிழாக்களில் நடைபெறும் போட்டிகளில்பரிசு வென்றேன்.

இதையடுத்து எனக்கு விளையாட்டை முறையாகக் கற்றுக் கொடுக்குமாறு அக்கம் பக்கத்தினர்அறிவுறுத்தினர். இதையடுத்து 2017-ம் ஆண்டு கோவை அத்லடிக் கிளப்பில் சேர்ந்து, நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி பெறத் தொடங்கினேன். அந்த ஆண்டுநடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில், நீளம் தாண்டு தலில் மூன்றாமிடம் பெற்றேன்.

கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றேன். இந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு ஜூனியர் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் முதலிடமும், டிரையாத்லான் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றேன்.

கடந்த வாரம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட கடுமையாக பயிற்சி செய்து வரு கிறேன்.

இவ்வாறு நிவேதிதா கூறினார்.

தேசிய தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இம்மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா, உதவி தலைமை ஆசிரியர் சதீஷ், உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கோவை அத்லடிக் கிளப் பயிற்சியாளர்கள் சீனிவாசன், விஷ்ணு ஆகியோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in