

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு அரையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிபிளஸ் 1 மாணவிகள் நா.தேன்மொழி,க.சரண்யா ஆகியோர் புதுக்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டனர். இதில், ஒற்றையர் பிரிவில் நா.தேன்மொழி, இரட்டையர் பிரிவில் நா.தேன்மொழி, சரண்யா ஆகியோர் வெற்றி பெற்று,மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர். இந்த மாணவிகளையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.சிவபாலன், எம்.பானுப்பிரியா ஆகியோரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர்ஆர்.மாரிமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வடிவேல் ஆகியோர் பாராட்டினர்.