தேசிய தடகள போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

தேசிய தடகள போட்டிக்கு மாணவர்கள் தேர்வு
Updated on
1 min read

கோவை

கோவையில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டி மூலம் தேசிய தடகள போட்டிக்கு மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:மாணவர்களுக்கான 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் சவறா பள்ளி மாணவர் கவின்ராஜ் முதலிடத்தையும், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்அகில் பாரிவேல் இரண்டாமிடத்தையும், சவறா பள்ளி மாணவர் சாய் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

100 மீ. தடைத்தாண்டி ஓடுதல் போட்டியில் எஸ்டிஏடி மாணவர் சூயேஷ்முதலிடத்தையும், நிதிஸ்குமார் இரண்டாமிடத்தையும், நவீன்குமார் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 600 மீட்டர்ஓட்டப்பந்தயத்தில் என்ஜிஎம் பள்ளிமாணவர் கிருஷ்ண பிரசாத் முதலிடமும், என்எஸ்எம் பள்ளி மாணவர் முகமது இர்ஃபான் இரண்டாமிடமும், செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்சந்தோஷ் மூன்றாமிடமும் பெற்றனர்.

1000 மீ. ஓட்டப்பந்தயத்தில் சபர்பன்பள்ளி மாணவர் கபில்காந்த் முதலிடமும், எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவர் ரெசி வர்மா இரண்டாமிடமும், எஸ்டிஏடி மாணவர் சூயேஷ் மூன்றாமிடமும் பெற்றனர். நீளம் தாண்டுதல் போட்டியில் பிஷப் பிரான்சிஸ் பள்ளி மாணவர் ரோஹித் முதலிடத்தையும், எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவர் விஷால் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

மாணவிகள் பிரிவு

மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீநிதி முதலிடமும், பாரதி மெட்ரிக் பள்ளி மாணவி தாபிதா இரண்டாமிடமும் பெற்றனர். 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் தர்மசாஸ்தா பள்ளி மாணவி சக்தி முதலிடத்தையும், சுகுணா ரிப் பள்ளிமாணவி ரீமா கேத்ரீன் இரண்டாமிடத்தையும், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவி அகத்தியா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

600 மீ. ஓட்டப்பந்தயத்தில் அல்வேர்னியா கான்வென்ட் மாணவி அப்ஸராமுதலிடத்தையும், ஆர்ஜெ பள்ளிமாணவி ஹன்சினி இரண்டாமிடத்தையும், செயின்ட் மேரீஸ் பள்ளிமாணவி கவித்ரா மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர். 1000 மீ. ஓட்டப்பந்தயத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி சந்தியா முதலிடத்தையும், செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி தேவதர்ஷினி இரண்டாமிடத்தையும், ஃபாரஸ்ட் ஹில் பள்ளி மாணவி தனுஷ்மதி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேசிய அளவி லான தடகளப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தடகள சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in