கற்பித்தல் பணி பாதிப்பதால் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

கற்பித்தல் பணி பாதிப்பதால் தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்: ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ள. உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக பணியமர்த்தப்படுவதால் தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து குறிப்பாக வேட்புமனு பெறுவதிலிருந்து தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை குறைந்தபட்சம் 15 நாட்களிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதம் வரை நீடிக்கும்உதவி தேர்தல் அதிகாரி பணி அலுவலங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏற்கனவே வாக்காளர் சரிபார்ப்பு பணி பிஎல்ஓ, டிஎல்ஓ போன்ற பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் வீதம் வருடம்முழுவதும் பணிபுரிந்து வருகிறார் கள்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக உதவி தேர்தல் அதிகாரி பணிவழங்குவதால் கற்றல்-கற்பித்தல்பணி பெரிதும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே பல்வேறு பணிகளுக்கிடையில் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. புதிய பாடத்திட்டம்- அதிக பாடம் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கு போதிய கால அவகாசமின்றி சிரமப்பட்டு வருகின்றோம்.இந்நிலையில் உதவி தேர்தல் அதிகாரி பணி வழங்கப்படுவதால் முற்றிலும் கற்பித்தல் பணி பாதிக்கும். எனவே மாணவர்களின் நலன்கருதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in