Published : 30 Oct 2019 10:18 AM
Last Updated : 30 Oct 2019 10:18 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாமின் கனவு மாணவர் விருது

கரூர்

கரூர் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கு கலாமின் கனவு மாணவர் விருது வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி டாக்டர்அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் தமிழக அளவில்சாதனை படைத்த 100 மாணவர்களுக்கு கலாமின் கனவு மாணவர்விருது வழங்கும் விழா செங்கல்பட்டில் நடைபெற்றது.

இவ்விழாவில், சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் ஆய்வு சார்ந்த நீர் செயற்கைக்கோளை தங்களது ஆசிரியர் பெ.தனபாலின் வழிகாட்டுதலுடன் தயாரித்து விண்ணில் செலுத்தி, பாராசூட் மூலம் மீண்டும் தரையிறக்கி ஆய்வு செய்து வரும்வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் நவீன்குமார், கோ.வசந்த், கா.பசுபதி, மு.விஷ்ணு, 8-ம் வகுப்பு மாணவர் சு.ஜெகன் ஆகியோருக்கு கலாமின் கனவு மாணவர் விருது, பதக்கம், பாரட்டுச்சான்று வழங்கப்பட்டன.

ஊர் மக்கள் பாராட்டுவிருது பெற்ற மாணவர்கள், தங்களது வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபாலுடன், கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.முத்துக்கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும்,கரூர் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் ப.சிவராமன், குளித்தலை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் மு.கபீர் ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) உதவி மாவட்ட திட்ட ஒருங்கி
ணைப்பாளர் மு.பக்தவச்சலம், பள்ளிதலைமை ஆசிரியை (பொ)இரா.கி.சாந்தி, பள்ளி கட்டிடக் குழுத்தலைவர் வீ.ராமநாதன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் ஆ.கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் பொதுமக்கள், பெற் றோர்கள் ஆகியோரும் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x