Published : 25 Oct 2019 10:45 AM
Last Updated : 25 Oct 2019 10:45 AM

மாணவர்களுக்கான கேரம் போட்டியில் மாநகராட்சி பள்ளி மாணவி கலைவாணி முதலிடம்

கோவை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவு சார்பில்,பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான கேரம் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இளநிலைப் பிரிவு (மழலை வகுப்புமுதல் 5-ம் வகுப்பு வரை), முதுநிலைப்பிரிவு (6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை) என இரண்டு பிரிவுகளாக ஒற்றையர், இரட்டையர் போட்டிநடைபெற்றது. போட்டியைத் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அமுதன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற இளநிலை ஒற்றையர் மாணவர் பிரிவில் மாநகராட்சி பள்ளி மாணவர் பதி முதலிடமும், வாசவி வித்யாலயா பள்ளி மாணவர் நிரஞ்சன் இரண்டாமிடமும் பெற்றனர்.

மாணவிகள் பிரிவில் சிஎஸ்ஐ மெட்ரிக் பள்ளி மாணவி பிரீத்தி முதலிடத்தையும், பொள்ளாச்சி குப்பண்ண கவுண்டர் பள்ளி மாணவி மெய்தினி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். இரட்டையர் மாணவர் பிரிவில் வாசவி வித்யாலயா பள்ளி மாணவர்கள் கரண்-சஸ்திக் ஜோடி முதலிடத்தையும், இதே பள்ளியைச் சேர்ந்த கபில்ராஜ்-முகுந்தேஷ் ஜோடி இரண்டாமிடத்தையும் கைப்பற்றினர்.

முதுநிலை ஒற்றையர் மாணவர்பிரிவில் விகேஎம் மெட்ரிக் பள்ளிமாணவர்கள் அக் ஷய்குமார் முதலிடமும், ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் ஹரிஹரன் இரண்டாமிடமும் பெற்றனர்.

மாணவிகள் பிரிவில் ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பள்ளி மாணவிகள் கலைவாணி முதலிடத்தையும், பவித்ரா பாரதி இரண்டாமிடமும் பெற்றனர்.

இரட்டையர் மாணவர் பிரிவில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்கள் சிவராம்-ஹரிஹரன் ஜோடி முதலிடத்தையும், வடசித்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சஞ்சய்-நவீன்குமார் ஜோடிஇரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

மாணவிகள் பிரிவில் கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவிகள் சுபர்ணா-சுனேத்ரா ஜோடி முதலிடத்தையும், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி மாணவிகள் பிரியதர்ஷினி-விஷ்ணுபிரியா ஜோடி இரண்டாமிடத்தையும் கைப்பற்றின.

போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், கேரம் சங்க செயலர் தங்ககுமார் ஆகியோர் பரிசளித்தனர். முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.500, இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.250 ரொக்கப்பரிசு வழங்கப்பட் டது. இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x