

சென்னை
பள்ளி மாணவர்களுக்கான தேசியதிறனாய்வுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வு நவம்பர்மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு பள்ளியின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.