

அரியலூர்
குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் அரியலூரில் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பாக காவல் துறையினருக்காக திறன் வளர்ப்புப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பை அரியலூர்மாவட்ட எஸ்.பி ஆர்.சீனிவாசன் தொடங்கிவைத்துப் பேசும்போது, "குழந்தைகள் தற்போது செல்போன்
களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இதனை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து விளக்க வேண்டும். மேலும், மாணவ, மாணவிகள் திறன்களை வளர்த்துக் கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கி செல்ல காவல்துறை உறுதுணையாக இருக்கும்" என்றார்.
அரியலூர் டிஎஸ்பி திருமேனி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.