

திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவில்லிபுத்தூர் அருகே பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. வி.பி.எம்.எம். மகளிர் கல்விநிறுவனங்கள் சார்பில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் "இளம் விஞ்ஞானி-2019" என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.
இக்கண்காட்சியை வி.பி.எம்.எ.ம். கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர்,தாளாளர் பழனிசெல்வி சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், 72 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த செய்முறை படைப்புகளை சமர்ப்பித்தனர். மாணவர்களின் படைப்புகளை திருவில்லிபுத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் இசபெல்லா பார்வையிட்டார்.
இதில் விருதுநகர் நோபிள் மெட்ரிக். பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் விமல்பெத்துராஜ் முதல் பரிசு ரூ.20 ஆயிரம் பெற்றார். ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ்2 மாணவி ஸ்ரீ புவனேஸ்வரி, விநாயகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி ஜெயசூர்யா ஆகியோர் இரண்டாம் பரிசு ரூ10 ஆயிரம் பெற்றனர். மேலும், சிவகாசி இந்து நாடார்மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாண
வர்கள் வெற்றிவேல்மணி, அழகுகுமார், ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி அஸ்ருதா ஜனனி ஆகியோர் மூன்றாம் பரிசாகதலா ரூ.5 ஆயிரத்தை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருவில்லிபுத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் பரிசுகளை வழங்கினார்.