

சென்னை
வேலூர் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். கலாமின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்கள் கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது பொன்மொழிகள் குறித்து பேசினர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகள் நட்டினர். பள்ளியின் முதல்வர் ஈ.மஞ்சுளா, ஸ்ரீ மகாலட்சுமி நர்சிங் கல்லூரிமுதல்வர் சி.எஸ்.சிவசக்தி மற்றும்ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் சாந்தி பாலாஜி, துணை தலைவர் எஸ்.பி.பாலாஜி, பொருளாளர் பா.கோமதி, இணைச் செயலாளர் வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.