

தேனி
டெங்கு தடுப்பு குறித்து தேனி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
மழைக் காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி நிற்கும் நன்னீரிலே ஏடீஸ் வகை கொசுக்கள் பல்கிப் பெருகும் என்பதால் இதுபோன்ற சூழ்நிலையை அகற்றும் வகையில் பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட வேண்டும் என்றுபள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. குடியிருப்புகள், தியேட்டர், பூங்கா,மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். லார்வா உருவாகும் இடங்களை அப்பகுதியில் உள்ளவர்கள் தெரியப்படுத்தி அது போன்ற சூழலை மாற்ற வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேனி கம்மவார் சங்க மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். இப்
பேரணியை பள்ளியின் செயலாளர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இணைச் செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். என்எஸ்எஸ், ஜேஆர்சி, சாரணர், பசுமைப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்பு மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள் பாரஸ்ட் ரோடு, என்ஆர்டி.நகர் உட்படபல்வேறு பகுதிகளுக்குச் சென்று டெங்கு உருவாவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்து அகற்றினர்.