

வத்தலகுண்டு
அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே வனப்பகுதியை பசுமையாக பள்ளி மாணவர்கள் விதைப்பந்துகளை வீசினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு அருகே கணவாய்ப்பட்டியில் அமைந்துள்ளது பர்ஸ்டெப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கயல்விழி முன்னிலை வகித்தார். பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரியாவரவேற்றார். விழாவைத் தொடர்ந்து,
பள்ளி மாணவர்கள் தாங்களே தயாரித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான விதைப் பந்துகளை எடுத்துக்கொண்டு 3 கி.மீ. தூரம் நடந்து சென்று கண்வாய்ப்பட்டி பெருமாள் சாமி கோயில் மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விதைப் பந்துகளை நாலாபுறமும் வீசி எறிந்தனர்.
இதன் மூலம், வனப்பகுதியில் விழும் விதைப் பந்துகள் உடைந்து மழைக் காலத்தில் அதில் உள்ள விதைகள் முளைப்புத் திறன் பெற்று வளர்வதன் மூலம் வனப்பகுதி பசுமையாகும் என பள்ளி நிர்வாகி கள் தெரிவித்தனர்.