

உதகை
நீலகிரி மாவட்டம் ஓவேலி பேருராட்சியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் அளித்த மனு:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ளது ஓவேலி பேரூராட்சி.
இங்கு, எல்லமலை, சீபுரம், பெரியசோலை, சூண்டி, கிளன்வன்ஸ், பாலவாடி உட்பட 8 கிராமங்கள் உள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையால், சேரன் நகர் பகுதியில் உள்ளபாலம் சேதமடைந்தது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எல்லமலை,சீபுரம், பெரியசோலை கிராமங்களுக்குஆரோட்டுப்பாறை, சுபாஷ் நகர் வழியாக பேருந்துகள் இயக்கலாம்.
தற்போது இச்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றினால் சேரன் நகர் பாலம் கட்டிமுடிக்கும் வரை மாற்று சாலையாகப் பயன்படுத்தலாம். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமமின்றி சென்றுவரலாம். எனவே, ஓவேலி பேரூராட்சி நிர்வாகம் மூலமாக இந்த சாலையை தார் சாலையாக மாற்றி தடையில்லா போக்குவரத்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.