

திருநெல்வேலி
தேசிய அஞ்சல் தினத்தை ஒட்டி அம்பாசமுத்திரம் மெரிட் பள்ளி மாணவ, மாணவிகள் தபால் துறையின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
அம்பாசமுத்திரம் மெரிட் பள்ளியில் தேசிய அஞ்சலக தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வர் மாடசாமி தலைமை வகித்தார்.
மெரிட் கல்விக் குழுமங்களின் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தபால் நிலையத்தின் பயன்கள், செயல்பாடுகள், அஞ்சல் துறை பொதுமக்களுக்கு ஆற்றிவரும் பல்வேறு பணிகள் குறித்து அம்பாசமுத்திரம் தலைமை தபால் நிலைய அஞ்சலக அதிகாரி வெங்கடேஸ்வரன் எடுத்துரைத்தார். மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
முன்னதாக, தபால் துறையின் செயல்பாடுகள் குறித்த மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி நிர்வாகி நாகலட்சுமி, துணை முதல்வர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.