இறகுப் பந்து போட்டியில் காரைக்கால் ஓஎன்ஜிசி பள்ளி முதலிடம்

இறகுப் பந்து போட்டியில் காரைக்கால் ஓஎன்ஜிசி பள்ளி முதலிடம்
Updated on
1 min read

காரைக்கால்

திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான இறகுப் பந்து போட்டியில், காரைக்கால் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனர்.

தெற்கு மண்டலம் 1-க்கான இறகுப் பந்துப் போட்டி கடந்த அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை திருச்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 19 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் காரைக்கால்

ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் மனுநீதி, சச்சின், சுந்தரராமன் மற்றும் பிளஸ் 1 மாணவா் அகிலவாசன் ஆகி
யோர் முதல் பரிசைப் பெற்றனர்.

அவர்கள் அனைவரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். இவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மனுநீதி, சச்சின், சுந்தரராமன், அகிலவாசன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in