திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் 17-ல் திறனறித் தேர்வு

திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் 17-ல் திறனறித் தேர்வு
Updated on
1 min read

திருச்சி

திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு நவம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோளரங்க திட்டஇயக்குநர் ரா.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு நவ.17-ம் தேதி
காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ரூ.60 வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கான பணத்தை வரைவோலை அல்லது ரொக்கமாகவோ (40 பேருக்கு மேல் மொத்தமாக பணம் செலுத்துபவர்கள் வரைவோலை மட்டும்) செலுத்தலாம். மாணவர்கள் தங்கள் பெயரை நவ.10-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வரைவோலையை ‘The Editor, Ariviyal oli, Chennai’ என்ற பெயரில் எடுத்து, ‘திட்ட இயக்குநர், அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கம், புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் (அஞ்சல்), திருச்சி,
620007’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 0431-2332190, 2331921 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in