காரைக்கால் முருகாத்தாள் ஆச்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற விழாவில் ஒரு மாணவிக்கு மரக்கன்றை வழங்குகிறார் மாவட்ட சார் ஆட்சியர் எம்.ஆதர்ஷ்.
காரைக்கால் முருகாத்தாள் ஆச்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவிக்கு மரக்கன்றை வழங்குகிறார் மாவட்ட சார் ஆட்சியர் எம்.ஆதர்ஷ்.

காரைக்கால் அரசு பெண்கள் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

Published on

காரைக்கால்

காரைக்காலில் உள்ள முருகாத்தாள் ஆச்சி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளியின் பொறுப்பாசிரியர் டெனிஷ் ஜோஸ்பின் தலைமை வகித்தார். பெற்றோர் சங்கத் தலைவர் அ.வின்சென்ட் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.

மாவட்ட சார் ஆட்சியர் எம்.ஆதர்ஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அவர் பேசும் போது, ‘‘நீர் நிலைகளின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இதேபோல, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் பெயரில் ஒரு மரக்கன்றை நட்டு பராமரித்து வரவேண்டும். தினமும் அந்த மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும்போது மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்’’ என்றார்.

வீடுகளில் மரக்கன்றை வைத்து பராமரிக்கும் வகையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில், பெற்றோர் சங்க செயலாளர் கே. ரவிச்சந்திரன், நிர்வாகிகள் அன்பரசன், சுரேஷ் கண்ணா, நெல்சன், குமரன், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in