கெட்டி மேளம், நாதஸ்வர இசையுடன் மாணவர் சேர்க்கை

கெட்டி மேளம், நாதஸ்வர இசையுடன் மாணவர் சேர்க்கை
Updated on
1 min read

தேவகோட்டை

தேவகோட்டையில் பள்ளி மாணவர் சேர்க்கை கெட்டி மேளம், நாதஸ்வர இசையுடன் அமர்க்களமாக நடந்தது. விஜயதசமி தினத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் வழக்கம் இருந்து வருகிறது. தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் விஜயதசமி அன்று மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இதையொட்டி நடராஜபுரம் காளியம்மன் கோயிலில் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளம், நாதஸ்வர இசையுடன் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

ஆசிரியர் கருப்பையா வரவேற்றார். சேவுகன் அண்ணாமலை கலைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் அருணாச்சலம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நெல்மணிகளில் ‘அ’ கரம் எழுத வைத்தனர். ஆசிரியர் முத்துலட்சுமி ,செல்வ மீனாள் திருக்குறள் ஒப்புவிக்க பயற்சி அளித்தனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in