எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு பயிற்சி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அளிக்கிறது

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சென்னை எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு பயிற்சி அளிக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்பள்ளியின் தாளாளர் எம்.சுப்ரமணியன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் ஸ்ரீமதி கேசன் ஆகியோர் பரிமாறிக்கொண்டனர். அருகில் பள்ளியின் ஆலோசகர் ஆர்.மாலதி, முதல்வர் எஸ்.புவனேஸ்வரி உள்ளனர்.

Updated on
1 min read

சென்னை: சென்னை எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ்இந்தியா நிறுவனம் செயற்கைக்கோள் வடிவமைப்பு பயிற்சி அளிக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி-நந்திவரத்தில் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு பயிற்சி அளிக்க பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்பேஸ் கிட்ஸ்இந்தியா நிறுவனத்துடன் கையெழுத்தானது. ஒப்பந்த ஆவணங்களை அப்பள்ளியின் தாளாளர் எம்.சுப்ரமணியன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் மதி கேசன் ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பள்ளியின் தாளாளர் சுப்ரமணியன் கூறும்போது, "எங்கள் பள்ளிமாணவர்கள் இஸ்ரோ உதவியுடன் தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கென 5 கிலோ எடை கொண்ட மினிசெயற்கைக்கோளை வடிவமைத்து விண்ணில் செலுத்த உள்ளனர்.

இப்பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் பயிற்சி அளிக்கும்" என்றார். ஸ்ரீமதிகேசன் கூறுகையில், "இந்த பயிற்சிக்கு 15 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செயற்கைக்கோளை வடிவமைப்பது குறித்துபயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் வடிவமைக்கும் செயற்கைக்கோள் அக்டோபரில் ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in