

கரூர்: கரூர் மாவட்டம் லிங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பரணிதரன் தெரிவித்தார். லிங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 196 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது புதிதாக பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் பரணிதரன் கூறு்மபோது, "பள்ளிவளாகத்தில் நிறுவுவதற்காக அமர்ந்த நிலையில் மூன்றரை அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அது நிறுவப்படும்" என்றார்.