குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
கோவை: குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு கல்வி கற்பவர்கள் மற்றும்படித்துமுடித்து தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருவோருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி மீட்கப்பட்ட 21 மாணவ, மாணவிகள் தற்போது கல்வி சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி கற்று வருகின்றனர். சிலர் படிப்பு முடித்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சந்தி்தது வாழ்த்தினார். அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
அவர் பேசும்போது,‘‘கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 35 சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 383 நிறுவனங்களிலிருந்து, 18 வயதிற்கு கீழ் உள்ள 27 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போட்டித்தேர்வுகள் மூலம் அரசு வேலைவாய்ப்பை பெற முயற்சிக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மாவட்ட திட்ட இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
