

ஓட்டாவா: கனடா நாட்டில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கனடா நாட்டின்தகவல் ஊடகத்துறை செய்தித் தொடர்பாளர் மோனாபோர் டியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின்னனு சாதனங்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, கனடா நாட்டிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு 28-ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட சாதனங்களில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசால் வழங்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களில் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தினால் அந்த செயலி அகற்றப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.