Published : 22 Feb 2023 06:12 AM
Last Updated : 22 Feb 2023 06:12 AM

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ராபிடோவுடன் இணைந்து காவல் துறை பிரச்சாரம்

சென்னை: சென்னை பெருநகர காவல் துறை மற்றும் ராபிடோ ஆட்டோ இணைந்து சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தின. சென்னையின் இரண்டு முக்கிய போக்குவரத்து சிக்னல்களான மயிலாப்பூர் லஸ் கார்னர் சிக்னல் மற்றும் சாந்தோம் ஹை ரோட்டில் உள்ள லைட் ஹவுஸ் சிக்னலில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை கிழக்கு பிரிவு துணை காவல் ஆணையர் சமய் சிங் மீனா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் போது ராபிடோ ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதில் கார்டியோ நுரையீரல் மறு இயக்கம் (CPR) மற்றும் அடிப்படை உயிர் ஆதரவு (முதல் உதவி) பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி சாலை விபத்துகள் அல்லது மருத்துவ அவசரத்தின்போது சரியான நேரத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் உதவ கை கொடுக்கும்.

இதுகுறித்து ராபிடோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி பேசியதாவது: பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த செய்திகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த செய்திகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கியத்துவம் குறித்து ராபிடோ ஆட்டோ ஓட்டுனர்கள் மைம் (விகட) நிகழ்ச்சியை நடத்தியது விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

விபத்து இல்லாத இந்தியாவை உருவாக்க எங்கள் பங்களிப்பை வழங்குவோம். இது சென்னையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலை சூழலை உருவாக்க உதவும்என்று நாங்கள் நம்புகிறோம். சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதன்மூலம் பொதுமக்களிடையே சாலைப்பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்து இல்லாத சென்னையைஉருவாக்கி, சென்னையின் சாலைபாதுகாப்பு சூழ்நிலையில் நீடித்ததாக்கத்தை ஏற்படுத்தி, விரிவானசாலை பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க காவல்துறையின் துணையோடு செயல்படுவதே ராபிடோநிறுவனத்தின் நோக்கமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x