

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
2-வது நாளான நேற்று சிறுவர்களுக்கான வாலிபால் போட்டியின் கால் இறுதிஆட்டம் ஒன்றில் செயிண்ட் பீட்ஸ் 25-08, 25-16 என்ற செட்கணக்கில் வித்யா உயர்நிலை பள்ளியை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. லிட்டில் பிளவர் 25-14,25-15 என்ற செட் கணக்கில் கிரசண்ட் உயர்நிலை பள்ளியையும், ஒய்எம்சிஏ 25-16, 25-18 என்ற செட் கணக்கில் கலைமகள் உயர்நிலை பள்ளியையும், ஜேப்பியார் மெட்ரிக் பள்ளி 25-16, 25-14 என்ற கணக்கில் சேக்ரட் ஹார்ட் உயர்நிலை பள்ளி அணியையும் தோற்கடித்து அரை சுற்றில் நுழைந்தன.
தொடர்ந்து நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் ஒய்எம்சிஏ 25-16, 25-18 என்ற செட் கணக்கில் ஜேப்பியார் மெட்ரிக் பள்ளி அணியை வீழ்த்தியது. செயிண்ட் பீட்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் லிட்டில் பிளவர் அணி கடைசி நேரத்தில் விலகியது. இதனால் செயிண்ட் பீட்ஸ் அணிவெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சிறுமியர்களுக்கான வாலிபால் போட்டியின் அரை இறுதி சுற்றில் கண்ணகி நகர் அரசு பள்ளி 25-15, 25-16 என்ற செட் கணக்கில் சிகேஎஸ்எஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரை இறுதி ஆட்டத்தில் கில் நகர் டிஏவி அணி 25-10, 25-12 என்ற செட் கணக்கில் வித்யோதயா பெண்கள் உயர்நிலை பள்ளி அணியை வீழ்த்தியது.