Published : 18 Jan 2023 06:06 AM
Last Updated : 18 Jan 2023 06:06 AM

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படாது: மத்திய அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: 2020-ம் ஆண்டில் உலக நாடுகள் பலவற்றில் தீவிரமாக பரவிய கரோனா பெருந்தொற்றினால் லட்சக்கணக்கான இந்திய மக்கள் பாதிக்கப்பட்டனர். கரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக அரசால் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக பிரபல ஆங்கில நாளிதழில் தகவல் வெளியானது. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பிடம் (சிடிஎஸ்சிஓ) கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சிடிஎஸ்சிஓ மற்றும் ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தடுப்பூசி குறித்து நாளிதழில் வெளியான தகவல்கள்தவறானவை. இந்தியாவில் நோய்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்பஆலோசனைக்குழு இந்தியாவில்பயன்படுத்தப்படும் கரோனா தடுப்பூசிகளின் நன்மைகள் மற்றும் பக்கவிளைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருக்கிறது. இதர தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் தலைவலி, தசைவலி, மயக்கம், காய்ச்சல், குளிர், மூட்டு வலி, ஊசி போட்ட இடத்தில் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஒரு சிலர் மட்டுமே ஆளாகினர்.

கரோனா பெருந்தொற்றின் தீவிரத்தை முறியடிக்கவும், அதிகப்படியான பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருக்கவும், இறப்பு விகிதத்தை குறைப்பதும்தான் கரோனா தடுப்பூசியின் முக்கிய நோக்கம். இதற்கும் மேலாக சிடிஎஸ்சிஓ தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் பட்டியல் cdsco.gov.in இணையதளத்தில் கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x