Published : 10 Jan 2023 06:14 AM
Last Updated : 10 Jan 2023 06:14 AM

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது: சீரம் நிறுவன சிஇஓ அதார் பெருமிதம்

புனே: உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறினார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் புதிய மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா பேசியதாவது: ஒவ்வொரு நாடும் இந்தியாவை தற்போது உற்று நோக்குகிறது. நமது கரோனா கட்டுப்பாட்டு பணிகள் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

அரசாங்கம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பொதுவான குறிக்கோள் காரணமாகஇது சாத்தியமானது. நான் உலகில்பல நாடுகளுக்கு சென்று வந்தேன்.உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தருணத்தில் இந்திய மக்கள் வெளிநாட்டுப் பயணங்களை தவிர்த்து உள்நாட்டிலேயே இருக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதார் பூனாவாலா கூறினார்.

புதிதாக 170 பேருக்கு கரோனா

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 170 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,46,80,094 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்தியபிரதேசத்தில் மட்டும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 5,30,721 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 52 குறைந்து 2,371 ஆக உள்ளது.

இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 0.01 சதவீதம் ஆகும். குணமடைந்தோர் எண்ணிக்கை 4,41,47,002 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.20 சதவீதம் ஆகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.11 சதவீதம் ஆகவும் உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.14 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x