கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயது மாணவிகளுக்கு தடுப்பூசி

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயது மாணவிகளுக்கு தடுப்பூசி
Updated on
1 min read

புதுடெல்லி: கர்ப்பப்பைப் புற்றுநோய் தடுத்தல் மற்றும் எச்பிவி தடுப்பூசியின் அவசியம் குறித்து நாடு முழுவதும் மாணவிகளிடையே, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து மத்திய கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உலக அளவில் பெண்களைப் பாதிக்கும் 4-வது முக்கியப் நோயாக கர்ப்பப்பைப் புற்றுநோய் உள்ளது. இந்தியாவில் கர்ப்பப்பைப் புற்றுநோய் 2-வது முக்கியப் புற்றுநோயாக இருப்பது தெரியவந்துள்ளது. கர்பப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தடுக்க முடியும்.

எச்பிவி தடுப்பூசி மூலம் கர்ப்பப்பைப் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஒரு முறை எச்பிவி தடுப்பூசியை செலுத்துவதற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இத்தடுப்பூசி, முதல் கட்டமாக 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செலுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் எச்பிவி தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை அரசு மற்றும் தனியார் பள்ளி மேலாண்மை குழுக்கள் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்காக பள்ளிகளில் படிக்கும் 9 வயது முதல் 14 வயது உடைய மாணவிகளின் விவரங்களை சேகரித்து யு-வின் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in