Published : 13 Dec 2022 06:06 AM
Last Updated : 13 Dec 2022 06:06 AM
சென்னை: தேசிய சிறுதொழில் கழகம் சார்பில் சென்னையில் வருகிற 16-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் தேசிய சிறுதொழில் கழகம் டிசம்பர் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் பி-24, என்எஸ்ஐசி-டெக்னிக்கல் சர்வீஸ் சென்டர் என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இம்முகாம் நடைபெறும் இதில், ஐடிஐ, டிப்ளமா, பி.இ, பி.டெக்., இளங்கலை பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்க வருபவர்கள் சுயவிவரக் குறிப்பு (பயோ டேட்டா), முகவரி ஆவணம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். மேலும், முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் https://tinyurl.com/nsic-register என்ற ஆன்லைன் லிங்க்கில் முன்பதிவு செய்ய வேண்டும் என தேசிய சிறுதொழில் கழகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT