Published : 09 Dec 2022 06:04 AM
Last Updated : 09 Dec 2022 06:04 AM

சிலம்பத்தில் பல்லோட்டி பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை

சென்னை: சிலம்பாட்டம் தொடர்ந்து 3 மணி நேரம் ஆடி மதுரை நாகமலை பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.யுவன் சந்தோஷ் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

மதுரை விராட்டிபத்தில் அண்மையில் பிபிஎம் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் கின்னஸ் ஸ்டார் உலகப்புத்தகத்தின் நிறுவனர்கள் கலித்ராஜ்,டேனியல் கிபியோன் ஆகியோர் முன்னிலையில் 100 பேர் கலந்து கொண்ட நிகழ்வில், மதுரை நாகமலை பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் ஆர்.யுவன் சந்தோஷ் 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பாட்டம் ஆடி கின்னஸ் உலக சாதனை படைத்தார். மாணவனை பள்ளியின் நிறுவனர் அருட்தந்தை இம்மானுவல், பள்ளித் தலைமை ஆசிரியை காமாட்சி ஷியாம்சுந்தர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x