Published : 30 Nov 2022 06:06 AM
Last Updated : 30 Nov 2022 06:06 AM

6 - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு; டிசம்பர் 15-ல் தொடங்குகிறது: கால அட்டவணை வெளியீடு

சென்னை: 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல்23-ம் தேதி வரை அரையாண்டுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக மாநில அளவில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழக்கமாக அரையாண்டுத் தேர்வுகள் 6 முதல் 9-ம் வகுப்பு வரை தனியாகவும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு தனியாகவும் நடத்தப்படும். இதற்கான காலஅட்டவணைகள் தனித்தனியாக வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு 6-ம் வகுப்பு 12-ம் வகுப்பு வரை ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அரையாண்டுத்தேர்வுகள் 6 முதல் பிளஸ் 2 வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் காலை 9.30 மணிக்கும் அதேபோல், 7, 9, 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மதியம் 1.30 மணிக்கும் தொடங்கும். முதல் 15 நிமிடங்கள் விடைத்தாளை படிப்பதற்கு வழங்கப்படும்.

தேர்வுக்கால அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஒருசில வகுப்புகளில் சில பாடங்களுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியானதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன.

இதைதொடர்ந்து விசாரனை நடத்தப்பட்டது. கேள்விதாள் முன்கூட்டியே வெளியானதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு எவ்வித சர்ச்சைகளுக்கும் இடம் தராமல் மிகுந்த கவனத்துடன் அரையாண்டுத்தேர்வுகளை நடத்ததேவையான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுக்க வேண்டும் என்றுமாணவர்களின் பெற்றோரும், கல்வியாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x