Published : 25 Nov 2022 06:13 AM
Last Updated : 25 Nov 2022 06:13 AM

8 ஆண்டுகளில் நிலவில் மனிதர்கள் வாழலாம்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ அறிவிப்பு

வாஷிங்டன்: நிலவில் இன்னும் 8 ஆண்டுகளில் மனிதர்கள் வாழவும் வேலை செய்யவும் முடியும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோடியாக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தின்படி ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு நாசா அனுப்பி உள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ள ஓரியன் விண்கலம் 2 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை துல்லியமாக படம் எடுத்து அனுப்பி உள்ளது.

இந்நிலையில், நாசாவுக்கான ஓரியன் விண்கலத் திட்டத்தை வழிநடத்தும் அத்திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹு கூறியதாவது: இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2030- ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வாழவும் வேலை செய்யவும் முடியும். நாங்கள் மக்களை நிலவுக்கு அனுப்பப் போகிறோம், அவர்கள் அந்த மேற்பரப்பில் வாழப் போகிறார்கள். மேலும், அங்கு அவர்களுக்கு தேவையான பணியை செய்யலாம். இது நாசாவுக்கு வரலாற்று நாள். அதுமட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளை விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த நாள்.

53 ஆண்டுகளுக்குப் பின் நாம் நிலவுக்கு திரும்பிச் செல்கிறோம். அதற்காகவே இந்த நிலையான (ஆர்டெமிஸ்) திட்டத்தை நோக்கி செயல்படுகிறோம். கடந்த 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.

வரும் 2024-ஆம் ஆண்டு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த 2014- ஆம் ஆண்டில் ஆளில்லாமல் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. ஓரியன் விண்கலம் ஏற்கனவே பூமியிலிருந்து 232,683 மைல்கள் பயணித்துள்ளது.

இந்நிலையில், நிலவுக்கும் மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் திட்டத்தில் நாசா ஆர்வம் காட்டி வருகிறது. நிலவின் தென் துருவத்திற்கு அருகே குழுவினர் தரையிறங்க வேண்டும் என்பது தற்போதைய திட்டம், அங்கு அவர்கள் ஒரு வாரம் தண்ணீரின் அறிகுறிகளைத் தேடுவார்கள்.

தண்ணீர்கண்டுபிடிக்கப்பட்டால், எரிபொருளாகமாற்றுவதற்கு அது பயன்படுத்தப்படலாம். அமெரிக்கா மட்டுமின்றி உலகத்துக் காகவும் நீண்ட கால திட்டமிட்ட விண்வெளி ஆய்வுக்கு நாங்கள் எடுக்கும் முதல்படி இதுவாகும். உலகம் முழுவதற்கு மான நாங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x