Published : 15 Nov 2022 06:08 AM
Last Updated : 15 Nov 2022 06:08 AM

மகனின் கல்விக் கண் திறந்த தந்தை

சிவா 8-ம் வகுப்பு மாணவன். பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் மட்டைப்பந்து விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்தான். மணி 6 ஆச்சு எங்கு சென்றாய் என அப்பா கேட்க, நான் சிலம்பம் வகுப்பு போனேன் என்றான். உன் ஆசிரியர் நீ பள்ளிக்கே வரவில்லை என்றாரே! உனக்கு கல்வி சுலபமாய் இலவசமாய் கிடைத்ததனால் தான் இப்படி இருக்கிறாய் என்று தன் பள்ளி நினைவுகளை கலங்கியபடி கூறினார் அப்பா. 1982-ல் நான் முதல் வகுப்பு சேர்ந்தேன். முதல் மதிப்பெண் தான் எடுப்பேன். ஆனால், குடும்ப சூழலால் அப்பா எனது படிப்பை நிறுத்திவிட்டு, பலசரக்கு கடைக்கு வேலைக்கு அனுப்பினார். கடையில் என்னைப் பார்த்த என் தமிழ் ஆசிரியர் நடந்ததைக் கேட்டுவிட்டு, என் அப்பாவிடம் பேசினார். எந்த பயனும் இல்லை. பின்னர் எனக்கு உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தும் கொடுத்து படிக்க வைத்தார் ஆசிரியர்.

நான் படித்து மருத்துவர் ஆனதால்தான் என் அப்பாவை மீட்க முடிந்தது. அந்த கல்விக்காக என் அம்மா, அப்பா என அனைவரையும் விலக நேரிட்டது. இன்று என் அப்பா அம்மாவை என்னுடன் சேர்த்ததும், எவ்வளவு கஷ்டம் இருப்பினும் அதிலிருந்து மீள கற்றுக் கொடுத்ததும் இந்த கல்விதான். கல்வி இலவசமாகவும் சுலபமாகவும் கிடைப்பால்தான் அதன் அருமை தெரியாமல் நீ இப்படிஇருக்கிறாய் என்றார். கல்வி நம்உரிமை. அதனை விட்டுக்கொடுக் காமல் கண் போல காப்போம் என்றார். சிவாவும் இனி நான் என்உரிமையான கல்வியை விடமாட்டேன் என்றான். - அ.அப்துல் ரவூப், 8-ம் வகுப்பு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பீமநகர், திருச்சி.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x