தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒருநாள் தலைமை ஆசிரியரான அரசு பள்ளி மாணவி

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒருநாள் தலைமை ஆசிரியரான அரசு பள்ளி மாணவி
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவி முத்துலெட்சுமி ஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று தேசியக் கொடியேற்றினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி சிறந்த மாணவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்க அறிவுறுத்தினார். அதன்படி குழந்தைகள் தின விழாவையொட்டி 8-ம் வகுப்பு மாணவி முத்துலட்சுமி ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அவருக்கு தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவி முத்துலட்சுமி வழிபாட்டுக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதன்பின்பு தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் உள்ள இருக்கையில் அமர வைக்கப்பட்டார். பின்னர் வகுப்புகள் தோறும் சென்று ஆய்வு செய்த அவர், மாணவர்களிடம் கல்விதொடர்பான குறைகளை கேட்டறிந்தார். சக மாணவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றியது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in