

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் குவியலாக குரங்குகள் இறந்து கிடந்தன. அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விஷம் கொடுத்து குரங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வேறு இடத்தில் சிலர் குரங்குகளைக் கொன்றுவிட்டு இங்கு வந்து வீசியிருக்கலாம் என்று தெரிவித்த வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.