Published : 27 Oct 2022 06:14 AM
Last Updated : 27 Oct 2022 06:14 AM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: ஆடம் ஸம்பாவுக்கு கரோனா தொற்று

பெர்த்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஆடம் ஸம்பாவுக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸம்பா இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

போட்டிக்கான வழிகாட்டுதல்படி, கரோனா தொற்றுடன் ஒரு வீரர் களம் இறங்க அனுமதி உண்டு. அதேநேரத்தில் அவர் அணியினருடன் செல்லாமல் தனியாக பயணிக்க வேண்டும். தனியாக பயிற்சி செய்யவேண்டும் என்ற விதிகள் உள்ளன. இதைத் தொடர்ந்து, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாகசுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் அணியில் வாய்ப்பு பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x