பாஜக தலைவராக நட்டா பதவிக் காலம் நீட்டிக்க முடிவு

பாஜக தலைவராக நட்டா பதவிக் காலம் நீட்டிக்க முடிவு
Updated on
1 min read

புதுடெல்லி: பாஜக தேசிய தலைவ ராக, ஜே.பி. நட்டா, கடந்த2020-ஆம் ஆண்டு ஜனவரி 20-இல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை எம்.பி.யான அவரது பாஜகதலைவர் பதவி வரும் ஜனவரியில் நிறைவு பெறுகிறது. ஆனால், 2024-இல் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலையும் நட்டா தலைமையிலேயே சந்திக்க, பாஜகமூத்த தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் முடிந்தவுடன் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in