

சென்னை: கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டய தேர்வின் (இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு) முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வெழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். விடைத்தாள் ஜெராக்ஸ் பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய கட்டணத்தை (ஒரு பாடத்துக்கு ரூ.275) வருகிற 12,13, 14-ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.