Published : 26 Sep 2022 06:13 AM
Last Updated : 26 Sep 2022 06:13 AM
சென்னை: நூலகப் படியேறினால் புதிய உலகைக் காணலாம். மாணவர்களின் வாழ்க்கையையே மாற்றும் சக்தி நூலகத்திற்கு உண்டு. அதற்கு நம் முன்னோர்களே சான்று. நூலகங்கள் உலகின் இரண்டாம் உலகம். சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் சமத்துவமாய் கூடும் இடம். நூலகம் படியேறி உள்ளே சென்று கற்றால் இவ்வுலகம் உன்னிடத்தில் தோற்கும். நல்ல அறிவுரைகளை சொல்லும் பெற்றோருக்கு மேலாக உயர்ந்து நிற்கின்றன நூலகங்கள். நூலகம் ஒரு மாயக்கூடம் அங்கு பலவகை ஆவி கள் உலாவுகின்றன. இப்படியாக நூலகத்தின் பெருமைகள் குறித்து பொன்மொழிகள் மிளிர்கின்றன.
நூலக தந்தைகள்: நூலகத்தின் பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்திய நூலக தந்தை பத்ம எஸ்.ஆர்.ரங்கநாதானின் பிறந்தநாள் (12.8.1892) "தேசிய நூலக தினமாக" கொண்டாடப்படுகிறது. பன்முக சிறப்புகளைக் கொண்ட இவர்,நூல்களை வகைப்படுத்தும் கோலன்பகுப்பு முறையை 1925-ல் அறிமுகப்படுத்தினார். 1928-ல் நூலக ஐந்து விதிகளை உருவாக்கியவர். "வேதி" என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்தவர். "தமிழக நூலக தந்தை" என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டின் முதல் நூலக இயக்குனராக பணியாற்றியவர் இவரே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT