Published : 26 Sep 2022 06:25 AM
Last Updated : 26 Sep 2022 06:25 AM
புதுடெல்லி: தேசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து விலகியுள்ளார்.36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தின் 7 நகரங்களில் வரும் 29-ம் தேதி முதல் அக்டோபர் 12-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற தெலங்கானா பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT