

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா சென்னை பெருங்குடி வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிவிழா கல்வெட்டை திறந்துவைத்து விழா மலரை வெளியிட்டு விழா பேருரை ஆற்றுகிறார். சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி சிறப்புரையாற்றுகிறார். விழாவில், சட்டத்துறை செயலர் பி.கார்த்திகேயன், சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், பதிவாளர் (பொறுப்பு) ரஞ்சித் ஓமன் ஆபிரகாம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொள்கிறார்கள்.