

கொழும்பு: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவருக்கான தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.17 வயதுக்கு உட்பட்ட ஆடவருக்கான தெற்காசிய கால்பந்து போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாளம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
இந்திய அணி சார்பில் பாபி சிங், கொரூ சிங், வன்லால்பேகா கிட், அமன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணியின் கேப்டன் வன்லால்பேகா கிட் தொடரின் சிறந்த வீரராகவும், சஹில் சிறந்த கோல்கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.