Published : 14 Sep 2022 06:06 AM
Last Updated : 14 Sep 2022 06:06 AM

பிளஸ் 2-க்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில், வரும் செப்., 22 முதல் 30-ம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெறவிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து, இதற்கான விரிவான கால அட்டவணை மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது.

இதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு 22-ம் தேதி மொழி பாடமும், 23-ம் தேதி ஆங்கிலமும், 26-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல், 27-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன், 28-ம்தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 29-ம் தேதி கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல், 30-ம் தேதி தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறவிருக்கிறது. இதேபோன்று பிளஸ் 1 வகுப்புக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x